அவளை மூன்று வருடத்திருக்கு பிறகு அன்றுதான் பார்த்தேன்.
தனி தமிழ் வகுப்பிற்கு தனியே செல்ல விரும்பாமல், ஒரு தோழனையும் அழைத்து வந்திருந்தேன். இழுத்து வந்திருந்தேன் என்றும் பொருள் கொள்ளலாம்.
இனி(ய) தமிழின் மேல் பற்றில்லாத அவனை, அங்கு கற்க வரும் தமிழ் இனிகளின் பெயர் கூறி இழுத்தது தனி அத்தியாயம். தனியே தமிழ் வகுப்பிற்கு சென்றால் வரும் அவப் பெயர் துடைக்கவே இத்தனை பாடு.
இப்படி அரும்பாடு பட்டு இழுத்து வந்த நண்பனோடு வகுப்பு முடிந்து செல்கையில் தான், அவள் பார்த்தாள்..சிரித்தாள்..பெரும் பிரச்சினைக்குள் என்னை இழுத்தால்.(பின் குறிப்பு: எங்கள் இருவருக்கும் இடையே சுமார் 30 அடி தேசிய நெடுஞ்சாலை இருந்தது, அதில் 20க்கும் அதிகமானோர் இருந்தார்கள், என்பதை நான் பெரிதாக பொருட்படுத்த வேண்டுமா?? வேண்டாமா??? )
அவள் எனக்கு சாதாரண வகுப்பு தோழியாகவோ, அல்லது எனது முந்திய காலத்தினை சிறிது மிகைபடித்தி எனது நண்பனிடம் முன்பே கூறாமல் இருந்திருந்தால் (சரி விடுங்க, கொஞ்சம் சுவரியசித்திற்காக பெரிது படுத்திதான் கூறினேன் என்று வைத்து கொள்ளுங்களேன்!!!) அந்த சிரிப்பு என்னை ஒன்றும் செய்திருக்க முடியாது...
ஆனால் எனது வாழ்வின் முந்திய பக்கங்கள் வேறுமாதிரியானவை. முன்பு நடந்த விஷயங்கள் என்னை வேறு ஒரு முடிவுக்கு தள்ளியன.
0 comments:
கருத்துரையிடுக