2011-08-05

நானும் அவைகளும் - 5

பெருசா, ரொம்ப கஷ்டப்பட்டு வரைய வேண்டிய படம் எல்லாம் இல்லை, line drawing  தான். 

அழகா ஒரு சின்ன பையன் ரெண்டு கன்னமும் bubblyah, chubbyah, cuteah, அழகா tie எல்லாம் கட்டிகிட்டு, bubblyah frock போட்டுகிட்டு இருக்கிற ஒரு சின்ன பொண்ணுகிட்ட ஒரு ரோசாப்பூவ கொடுக்கிற மாதிரி,  வெக்கத்தில கன்னம் சிவந்து, ரெண்டு பேர் கண்கள் கவிதை பாடினு, ஒரு பாரதிராஜா பட trailer-ae ஓடிட்டு இருந்துச்சு. 

(உபயம்: ராஜ் டிஜிட்டல் பிளஸ் - அந்த timela எல்லாம் இதில் தான் நிறைய படம் பார்த்ததாய் ஞாபகம்)

மொத்ததில அந்த Greeting card ஒரு Master piece. ஆனா அந்த piece-ai  இந்த piece கிட்ட எவன் கொடுத்தான்னு தெரியலை??? சரி அதெல்லாம்  இப்போ யோசிச்சு என்ன பண்றது. திருவாளர். மதிப்புமிகு.சனி அவர்கள், shorts போட்ட ஒருத்தனை (பி. கு. அன்னைக்கு P.T. period, விளையாட்டு periodla shorts தான் போடுவோம்) , என் விலாசம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்னு தெளிவா தெரிஞ்ச பின்பு என்ன செய்யமுடியும் சொல்லுங்க. 

வரைந்து கொடுக்க முடியுமானு கேட்டுருந்தால்  வரைய முடியாதுன்னு சொல்லி இருக்கலாம். ஆனால் வரைந்து கொடுடா-ன்னு சொல்றவன்கிட்ட என்ன சொல்ல முடியும். சீனியர்க்கு சீனியர், பல வில்லககங்களை தன்னகத்தே கொண்டவர், வேற என்ன சொல்ல முடியும்.


  "I am cornered your Honor".


Class- la வில்லன்னு form ஆகி இருந்தாலும், அந்த படம் வரைந்து கொடுக்கிற வரை, எனக்கு செம்ம கவனிப்பு.  Tube ஐஸ் (இப்போ இந்த வஸ்து எங்கும் கிடைப்பது இல்லை), சமோசா, பரோட்டா (நன்றி:ஸ்கூல் கான்டீன்). இதனாலயே, ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய படத்தை ஐந்து மணி நேரம் கழித்து முடித்தேன்.(பொறுமையும், pocket money-யையும் இழந்துவிட்டார்கள்). வரைந்து முடித்த உடன், முப்பத்தி இரண்டு பற்களுடன் சிரித்து, என்னை முத்தமிட துரத்தியது தனி அத்தியாயம் !!!

ஓசில அதிகமா சப்பிட்டதாலோ, அவன் சிரிப்பை ரொம்ப பக்கத்தில் பார்த்ததாலோ , காரணம் எதுவும் இல்லாமல் அடுத்த நாளில் இருந்து எனக்கு கடும் காய்ச்சல். ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து, complete Home rest.


ஒரு வாரம் கழித்து பள்ளி போன பின்பு தான் பெரும் அதிர்ச்சி...


இனி பெரும் காய்ச்சல்...   




2 comments:

 
Back to top!