வாடிய பயிரை கண்டே
வாடிய என் தேசமிது;
வாடி வாசலுக்கு இன்று
ஒன்றாய் கூடியது.
வெற்று கூச்சலில்லை,
கூடியவர்களில் குழப்பங்களில்லை.
மொத்த உலகத்திற்கும்
மற்றுமொருமுறை உதாரணமானது
அறப்போருக்கு;
அண்ணன் தங்கை உறவுக்கு.
உலகத்தில் உள்ள மொத்த
உறவும் ஒன்றுசேர;
உலகமே உற்றுநோக்க;
உற்ற வாகைசூடும் நேரம்
கண்பட்டதோ இல்லை,
கயவர்களின் காழ்ப்புணர்ச்சி
கரை தாண்டியதோ,
கூடியிருந்த களத்தில்
களைகள் கூடின
கயமைகளை கட்டவிழ்த்தன.
வாகை சூடியும்,
வருத்தமே உயிர் மூச்சில்..
வாடிய என் தேசமிது;
வாடி வாசலுக்கு இன்று
ஒன்றாய் கூடியது.
வெற்று கூச்சலில்லை,
கூடியவர்களில் குழப்பங்களில்லை.
மொத்த உலகத்திற்கும்
மற்றுமொருமுறை உதாரணமானது
அறப்போருக்கு;
அண்ணன் தங்கை உறவுக்கு.
உலகத்தில் உள்ள மொத்த
உறவும் ஒன்றுசேர;
உலகமே உற்றுநோக்க;
உற்ற வாகைசூடும் நேரம்
கண்பட்டதோ இல்லை,
கயவர்களின் காழ்ப்புணர்ச்சி
கரை தாண்டியதோ,
கூடியிருந்த களத்தில்
களைகள் கூடின
கயமைகளை கட்டவிழ்த்தன.
வாகை சூடியும்,
வருத்தமே உயிர் மூச்சில்..
0 comments:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.