2009-05-30

சுதந்திரத்தின் எச்சம்

கொடிகம்பம் எழுந்தது

குப்பைகள்  களைந்தன
தெளிந்த நீர் பாய்ந்தன
தோரணங்கள் பறந்தன
கூட்டங்களும் சேர்ந்தன
கார்கள் வந்தன
கரையின்  மிடுக்குடன்
வேட்டிகள் இறங்கின

சில பேர் பேச
பல பேர் இரைய
சில வினாடி வாழ்ந்த காந்தி
பல நூறு வினாடி மறுபடி சாக
பேசப்பட்ட பொருள்
பெரிதும் வேறு கட்சிக்காரன்தான்
பலரும் மறந்தது என்னவோ
அந்நியரிடம் அடிமைப்பட்டு இருந்தைத்தான்

கூட்டம் முடிந்தது
இனிப்பும் வந்தது
கார்கள்  பறந்தது
கலகலப்பும் மறைந்தது

மிச்சமாய் எஞ்சின

அந்நிய நாட்டு இனிப்பின்
கசங்கிப்போன காகிதங்களும்
அதற்கு நடுவினிலே
கொடிகம்பமும்
காந்தி படமும்.

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!